Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கணவன் மனைவி தகராறு…. தனியார் நிறுவன காவலாளியின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சினை காரணமாக தனியார் நிறுவன காவலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

சென்னையிலுள்ள புரசைவாக்கம், பிரிக்ளின் பகுதியில்  பாலாஜி, தனலட்சுமி  தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன், மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர்.

பாலாஜி அப்பகுதியிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார்.  கடந்த சில நாட்களாகவே பாலாஜியும் தனலெட்சுமியும்   அடிக்கடி சண்டை  போட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மனவேதனையில் இருந்த பாலாஜி நேற்று முன்தினம் பிற்பகல் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் அருகிலுள்ள தலைமைச் செயலக காலனி போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்  பாலாஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும்  இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |