வேலூரில் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி கணபதி நகரில் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக சத்துவாச்சேரி காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. இத்தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் காவல்துறையினர் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது கணபதி நகர் சுடுகாடு அருகில் சந்தேகப்படும்படி ஒரு நபர் நின்று கொண்டிருந்தார்.
அவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்தபோது, தோட்டம் பாளையத்தில் வசித்துவந்த கோபி(35) என்பதும், அவர் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடமிருந்து 9 துண்டு சீட்டுகள், ரூ 200 பறிமுதல் செய்துள்ளனர்.