நடிகை சோனியா அகர்வாலின் திறமையை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சோனியா அகர்வால். இவர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த காதல் கொண்டேன் படத்தின் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சோனியா அகர்வால் தனது முதல் படத்திலேயே அபார நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். இதற்கிடையில் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் விவாகரத்து செய்து பிரிந்தனர். இவர்களின் இந்த பிரிவுக்கு பிறகு தனது கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார் சோனியா. மேலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை சஞ்சனா சிங் இணையதள பக்கத்தில் தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனுடன் இந்த புகைப்படங்களை எடுத்தது என் நெருங்கிய தோழி சோனியா அகர்வால் என தெரிவித்துள்ளார். இவரின் இந்த ட்விட்டை பார்த்த ரசிகர்கள் கூறியதாவது. சோனியா அகர்வால் நல்ல நடிகை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இவ்வளவு அழகான புகைப்படங்கள் எடுப்பார்கள் என்பது இத்தனை நாட்களாக எங்களுக்கு தெரியாமல் போய்விட்டது. சோனியாவிற்கு இப்படி ஒரு திறமையா என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் சமீபத்தில் சோனியா அகர்வால் செல்வராகவன் பிரிந்தது பற்றியும் தன் முதல் தமிழ் படத்தில் ஹீரோவான தனுஷ் பற்றி தனது அம்மா அதிர்ச்சி அடைந்தது குறித்தும் அவர் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.