விண்வெளி ஆராய்ச்சியிலுள்ள சீனவீரர்கள் அங்கிருந்தவாறு நேரலை வாயிலாக அமெரிக்க குழந்தைகளின் சந்தேகங்களுக்கு தீர்வு வழங்கினர். அதாவது தனி விண்வெளி நிலையத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சீனா அதற்காக வீரர்களை அனுப்பி கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையில் பணியின் இடையில் பல நிகழ்வுகளில் ஈடுபட்டு அதனை வீடியோவாக வீரர்கள் வெளியிட்டு வருகின்றனர். இந்தநிலையில் அமெரிக்க குழந்தைகளின் விண்வெளி தொடர்பான சந்தேகங்களுக்கு சீனவீரர்கள் பதிலளித்தனர். அமெரிக்காவிலுள்ள சீன தூதரகத்தில் நடந்த நிகழ்வில் பல ருசிகரமான கலந்துரையாடல்கள் அரங்கேறியது.