Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“இருந்து வந்த முன்விரோதம்” அண்ணன் தம்பியின் வெறிச்செயல்….. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

வாலிபரை சரமாரியாக வெட்டி நகையை  பறித்த அண்ணன் தம்பியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கபிஸ்தலம் கிராமத்தில்  விவசாயியான அரவிந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சகோதர்கள்  தவமணி, சுரேஷ், ஆனந்த் ஆகிய 3 பேருடன் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று அர்விந்த்  அதே பகுதியில் அமைந்துள்ள கரும்பு கொல்லையில் மரத்தை வெட்டி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தவமணி, சுரேஷ், ஆனந்த் ஆகிய 3 பேரும் அரவிந்தை  அரிவாளால் சரமாரியாக வெட்டி  விட்டு அணிந்திருந்த 2 பவுன் தங்க நகையை பறித்து கொண்டு  தப்பி ஓடிவிட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த அரவிந்தை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அரவிந்த் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தவமணி, சுரேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் ஆனந்தை   தீவிரமாக தேடி வருகின்றனர்

Categories

Tech |