பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே வடசிறுவள்ளூர் பகுதியில் சரவணன்- பாவனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் பாவனா திடீரென விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி நிலையில் கிடந்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பாவனாவை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு பாவனா அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பாவனா பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக சங்கராபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.