குடும்ப தகராறு காரணமாக விவசாயி மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே உள்ள சிங்களம்கோம்பை பகுதியில் உள்ள ஒரு மரத்தில் முதியவரின் பிணம் தூக்கில் தொங்கி கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் உடனடியாக வாழவந்திநாடு காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சென்ற போலீசார் முதியவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரித்ததில் அவர் எருமபட்டியை சேர்ந்த துரைசாமி(72) என்பது தெரியவந்தது. விவசாயியான இவர் குடும்ப தகராறு காரணமாக தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் வெளியானது. இச்சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.