பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப் லண்டனிலிருந்து பாகிஸ்தான் நாட்டிற்கு திரும்பவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பாகிஸ்தான் நாட்டின் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் நம்பிக்கையற்ற தீர்மானத்தை நிறைவேற்றி ஆட்சியை கவிழ்த்து விட்டனர். அதையடுத்து எதிர்க் கட்சிகள் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைக்கவிருக்கிறது. எனவே, நாட்டின் அடுத்த பிரதமராக முஸ்லீம் லீக் கட்சி தலைவர் ஷெபாஸ் செரீப் பதவியேற்கவிருக்கிறார்.
இவர் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர். நவாஸ் ஷெரீப், மருத்துவ சிகிச்சைக்காக லண்டனுக்கு சென்றிருந்தார். அதன் பிறகு, அவர் லண்டனிலேயே தங்கிவிட்டார். இந்நிலையில் அடுத்த மாதத்தில் அவர் பாகிஸ்தான் திரும்பவிருப்பதாக அவரது கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் கூறியிருக்கிறார்.