ஐபிஎல் 15ஆவது சீசன் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி 4 போட்டிகளை சந்தித்த நிலையில், அனைத்திலும் தோல்வியை தழுவியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் CSK, MI அணிகளை பார்த்து மற்ற அணிகள் பயப்படவில்லை என இந்திய கிரிக்கெட் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார். MI மற்றும் CSK வீரர்கள் ஏலம் மூலம் வெவ்வேறு அணிக்கு சென்றுள்ளதால், அந்த அணிகளின் பலம் கூடியுள்ளது. அதனால் முன்பு போல் CSK,MI உடைகளைப் பார்த்து பீதி அடைவதில்லை என தெரிவித்துள்ளார். இதுவரை எந்த ஐபிஎல் தொடரிலும் இல்லாத வகையில் CSK நான்கு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் 9வது இடத்தில் உள்ளது.
Categories