இந்தியாவில் தனி நபர் அடையாள அட்டைகளுள் ஒன்று ஆதார் கார்டு ஆகும். இந்த ஆதார் கார்டு வாயிலாக வங்கிகளில் டிஜிட்டல் முறையில் பணத்தை பெற முடிகிறது. அதுமட்டுமல்லாமல் பல சேவைகளை பெற ஆதார் கார்டு இன்றியமையாத ஒன்றாக திகழ்கிறது. இதன் காரணமாக அனைவரும் ஆதார் வைத்திருக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். இதில் ஆதார்கார்டு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்பட்டு வருகிறது. ஆதார்கார்டில் தங்களது பெயர், முகவரி, பிறந்ததேதி ஆகிய அனைத்து தகவல்களும் இடம்பெற்றிருக்கும்.
மேலும் வங்கிக்கணக்குகள், வாகனங்கள் மற்றும் காப்பீட்டுத் திட்டங்களும் இப்போது ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இப்போது ஆதார் கார்டில் ஏதெனும் மாற்ற நினைக்க வேண்டும் எனில் அலையவேண்டிய தேவையில்லை. இதற்கான ஆன்லைன் போர்ட்டலை UIDAI நிறுவனமானது தொடங்கி இருக்கிறது. இதில் தங்களுக்கு தேவையான படிவத்தை பதிவிறக்கம் செய்துகொண்டு அருகிலுள்ள ஆதார் சேவை மையத்தில் சமர்ப்பித்தால் மட்டுமே போதுமானது ஆகும். அத்துடன் இப்போது ஆதார்கார்டுடன் புதிய மொபைல் எண்ணை இணைக்கலாம். தற்போது ஆதார்கார்டுடன் புதிய மொபைல் எண்ணை இணைப்பதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
# முதலில் UIDAIயின் ask.uidai.gov.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
# இவற்றில் தங்களின் மொபைல் நம்பரை பயன்படுத்தி உள்நுழையவும். தற்போது ஆன்லைன் ஆதார் சர்விஸ் செக்ஷனில் இருந்து மொபைல் நம்பர் என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
# தற்போது தங்களின் விபரங்களை உள்ளிட்டு பின் கேப்ட்சா குறியீட்டை கொடுக்கவும்.
# அதன்பின் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP எண் அனுப்பப்படும்.
# முடிவில் OTP எண்ணை உள்ளிட்டு “சேவ் அண்ட் ப்ரொசீட்” என்பதைக் கிளிக் செய்யவும்.