ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இருந்த வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் தனது சகோதரியின் மரணத்தை தொடர்ந்து அணியில் இருந்து விலகினார்.
ஹர்ஷல் பட்டேல் கடந்த இரண்டு சீசன்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த ஆண்டு ஆர்சிபி அணி இவரை 10.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இந்நிலையில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பெங்களூரு அணி விளையாடியது. இந்த ஆட்டத்தில் மும்பை 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தியது. இந்த ஆட்டத்தின் போது பெங்களூரு அணி ஹர்ஷல் படேலின் சகோதரி உயிரிழந்தார். போட்டி முடிந்த பிறகு இந்த செய்தி அவருக்கு தெரியவந்தது.
இதையடுத்து ஹர்ஷல் அணியில் இருந்து வெளியேறினார். ஹர்ஷல் பட்டேல் குடும்பம் அமெரிக்காவில் வசித்து வருகின்றது. கிரிக்கெட் விளையாடுவதற்காக ஹர்ஷல் பட்டேல் மட்டும் இந்தியாவில் தங்கியுள்ளார். இவருக்கு மொத்தம் மூன்று உடன்பிறந்தவர்கள் உள்ளனர். ஹர்ஷல் படேல், தபன் படேல் மற்றும் அர்ச்சிதா படேல். ஹர்ஷலின் தங்கையான அர்ச்சிதா படேல் தற்போது உயிரிழந்துள்ளார். அணியில் இருந்து விலகி அவர், 12ஆம் தேதி சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் அணியுடன் மீண்டும் இணைவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.