Categories
தேசிய செய்திகள்

“ஒரே நாடு – ஒரே ரேஷன்”…. மத்திய அரசின் புதிய திட்டம்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

குடும்ப அட்டைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் குடும்ப அட்டையின் மூலமாக நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மக்கள் அனைத்து நியாயவிலைக்  கடைகளிலும்  பொருட்களை வாங்கி கொள்ளலாம். இருப்பினும் மக்களுக்கு நியாய விலைக் கடைகளின் மூலம் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் சரியான முறையில் சென்றடைவதில்லை என குற்றச்சாட்டுகளும் நிலவி வருகிறது.

இதனையடுத்து நியாயவிலைக் கடையில்  பொருள்களை மலிவு விலையில் வாங்கி அதை கள்ளச் சந்தையில் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றங்கள் எழுந்துள்ளது. இதை தடுக்கும் விதமாக மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. இந்தத் திட்டத்தின்படி தகுதியற்றவர்களுக்கு நியாயவிலைக் கடை பொருட்கள் கிடைப்பதை தடை செய்யவும், தகுதியானவர்களுக்கு பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யவும் முக்கிய செயல் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. மேலும் மத்திய அரசின் திட்டத்தின்படி ஏழை, எளிய மக்களுக்கு நியாய விலைக் கடைகளின் மூலமாக பொருட்கள் சீரான முறையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |