பாகிஸ்தான் நாட்டில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
பாகிஸ்தான் நாட்டில் நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதற்கு பிரதமர் இம்ரான் கான் தான் காரணம் என்று எதிர்க்கட்சியினர் அவர் மீது நம்பிக்கையற்ற தீர்மானத்தை நிறைவேற்றினர். எனவே அவரின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பின் சகோதரரும் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவருமான ஷபாஸ் ஷெரிப்பை புதிய பிரதமராக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இவர் நேற்று நாடாளுமன்ற செயலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அதையடுத்து அதிகமான உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்ததால் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.