தை மாதம் 10-ஆம் தேதி வெள்ளிக்கிழமை 3 மணி 6 நிமிடங்களுக்கு அம்மாவாசை திதியானது ஆரம்பமாகின்றது.
இதனால் சரியான நேரத்திற்கு நீர்நிலைகளுக்கு போனாள் அங்கு இந்த தர்பணம் கொடுப்பதற்கெனவே நிறைய குருக்கள் அமர்ந்திருப்பார்கள் அங்கு சென்று தர்ப்பணம் கொடுக்கலாம். அப்படி இல்லையானால் வீட்டில் தர்ப்பணம் கொடுக்க வேண்டுமென்றால் இந்த நேரத்திற்கு பிறகு தான் நம்ம வீட்டுலயும் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
அன்று முழுவதுமே முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்கும் நாளாகவும், சிறந்த நாளாகவும் கருதப்படுகிறது. வழிபடுவதற்கான சிறந்த நேரம் எதுவென்றால் காலை 8 மணி 25 நிமிடம் முதல் 9மணி 48 நிமிடம் வரை பூஜை செய்யவும் பரிகாரம் செய்யவும் அன்னதானம் கொடுக்கவும் மற்றும் தர்ப்பணம் கொடுக்கவும் இந்த நேரத்தை உபயோகப்படுத்தலாம்.
இந்த நாளில் ராகுகாலம் மற்றும் எமகண்டம் ஆகியவற்றை தவிர்த்துவிட்டு திதி கொடுப்பதையும் தர்ப்பணம் கொடுப்பதையும் மற்ற நேரங்களில் செய்யலாம்.