மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் உள்ள மன்னர் மேல்நிலைப்பள்ளியில் வைத்து வருகின்ற 19-ஆம் தேதி அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் மாவட்டம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் இருந்து மொத்தம் 30 மாணவர்களும், ஒரு கல்லூரிக்கு இரண்டு மாணவர்கள் என அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்தப் போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக 5 ஆயிரம் ரூபாயும் , 2-வது பரிசாக 3 ஆயிரம் ரூபாயும், 3-வது பரிசாக 2 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது. எனவே இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் நம் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வட்டார கல்வி அலுவலர் அல்லது மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை தொடர்புகொண்டு போட்டியில் பங்கு பெறலாம் என மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்