கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்த விபத்தில் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சங்கரலிங்கபுரத்தில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொன் கொடி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தம்பதியினர் பொன்கொடியின் சகோதரியான கார்த்திகா என்பவருடன் காரில் சாத்தூரில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தனர். இவர்கள் மீனாட்சிபுரம் விலக்கு அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி மைல்கல் மீது மோதி கவிழ்ந்துவிட்டது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மகேந்திரன் மற்றும் பொன்கொடி ஆகிய இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பொன் கொடியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் மகேந்திரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் கார்த்திகா காயமின்றி உயிர் தப்பிவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.