விடுமுறை தின பட்டியலில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் நீக்கப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான ஜனவரி 23ஆம் தேதியை மீண்டும் பொது விடுமுறை தினமாக ஜார்கண்ட் மாநில அரசு அறிவித்தது .
ஜார்கண்ட் மாநிலத்தில் நேதாஜி பிறந்த நாளை கடந்த 2014ஆம் ஆண்டு வரை விடுமுறை தினமாக கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால் 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையில் இந்த தினம் பொது விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் பிரான்சில் நடைபெற்ற ஒரு ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அந்த மாநில முதலமைச்சர் திரு.ஹேமந்த் ஸ்சோரன் நேதாஜி பிறந்தநாளான ஜனவரி 23ஆம் தேதியை பொது விடுமுறை தினமாக அறிவித்து உத்தரவிட்டார்.
அதன்படி முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் நேதாஜியின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி மாநிலத்துக்கும், தேசத்துக்கும், சேவை செய்ய இளைஞர்கள் முன்வரவேண்டும் என முதல்வர் ஹேமந்த் ஸ்சோரன் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.