தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பூபாலராயர்புரம் பகுதியில் ஜஸ்டின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுரேஷ் என்ற மகன் உள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் கிரவுண்ட்சன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சுரேஷ் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த கிரவுண்ட்சன் சுரேஷிடம் தகராறில் ஈடுபட்டு சாப்பிட பயன்படுத்தும் முள் கரண்டியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சுரேஷ் வடபாகம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கிரவுண்ட்சனை கைது செய்துள்ளனர்.