போர் காரணமாக உக்ரைன் நாடு 45 சதவிகிதம் பொருளாதார வீழ்ச்சியடைந்ததாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 47வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போர் காரணமாக இந்த வருடம் உக்ரேனின் பொருளாதாரமானது 45 சதவிகிதம் வீழ்ச்சியடைந்ததாக உலக வங்கி கூறுகின்றது. மேலும் கிழக்கு ஐரோப்பிய மற்றும் மத்திய ஆசியா நாடுகள் முழுவதும் கொரோனா தொற்றால் ஏற்பட்டதை விட இந்த ஆண்டு பெரிய அளவில் பொருளாதார சேதம் ஏற்படும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. உக்ரைன் நாட்டின் பெரும்பாலான பணியாளர்கள் தப்பித்து ஓட வேண்டும் அல்லது துணிந்து சண்டையிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
குறிப்பாக வணிகங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டும் சாலைகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டும் உள்ளது. மேலும் உக்ரைனின் பல வருட முன்னேற்றம் கவர்க்கபட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உக்ரேன் நாட்டில் சூரியகாந்தி, கோதுமை போன்ற பயிர்கள் முக்கிய ஆதாரமாக இருந்தது. இந்த பொருள்களின் ஏற்றுமதி நிறுத்தப்பட்டதால் உலகளவிய உணவு பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் உக்ரைன் நாடு ஒரு முக்கியமான வருமானத்தை இழந்துள்ளது. இந்த ஆண்டு ரஷ்யா 11 சதவீதத்திற்கும் அதிகமான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்ததாக உலக வங்கி தெரிவித்துள்ளது.