அம்பத்தூர் அருகே கம்பெனி பணத்தை எடுத்து சென்று கொண்டிருந்த ஊழியரை மர்ம நபர்கள் கத்தியால் குத்தி பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.
மதுரவாயில் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் விஜயகுமார் என்பவர் வேலை செய்து வருகின்றார். இவர் நேற்று மதியம் கம்பெனிக்கு சொந்தமான 82 லட்சத்தை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தாம்பரம் பைபாஸ் வழியாக தொழிற்பேட்டை மேம்பாலத்தில் வந்த பொழுது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்துள்ளனர். அப்போது அவரை வழிமறித்த அந்த மூன்று பேர் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஜயகுமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
பின்னர் 82 லட்சத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர். அங்கு சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர். விரைந்து வந்த அம்பத்தூர் கமிஷனர் கனகராஜ், இன்ஸ்பெக்டர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த விஜயகுமாரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் ஆய்வு செய்து வருகின்றார்கள். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.