உக்ரைன் நாட்டுக்கு உதவும் நோக்கில், நியூசிலாந்து அரசு 9 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி உதவியை ஒதுக்கீடு செய்வதாக தெரிவித்துள்ளது.
நியூசிலாந்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் நாட்டுக்கு மேலும் உதவி செய்யும் வகையில், ராணுவ உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நியூசிலாந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் பினீ ஹெனேர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, C-130 ஹெர்குலஸ் என்ற விமானத்தில் ராணுவ உபகரணங்களுடன், 58 வீரர்கள் ஐரோப்பாவிற்கு அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்நாட்டிற்கு உதவும் நோக்கில் சட்டரீதியான நடவடிக்கைகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளில், கூடுதலாக 9 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி உதவி ஒதுக்கீடு செய்வதாகவும் நியூசிலாந்து அரசு அறிவித்துள்ளது.