Categories
சினிமா தமிழ் சினிமா

‘பெரியார் ஒரு சாதிக்கு தான் எதிரானவர்’ – கஸ்தூரி ட்வீட்

பெரியார் ஒரு சாதிக்கு மட்டும் தான் எதிரானவர் என்று நடிகை கஸ்தூரி ட்வீட் செய்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் பொது விழாவில், பெரியார் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தான் பெரியார் குறித்து எதுவும் தெரியாமல் பேசவில்லை என்றும், தான் பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க முடியாது என்றும் இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்து ரஜினிகாந்த் பேட்டி அளித்தார்.

அதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ரஜினிகாந்த் பேசியதற்கு எதிராக, திமுக கட்சியினர் சிலர் நேற்று போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் தற்போது அது குறித்து நடிகை கஸ்தூரி ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘பெரியார் சாதிக்கு எதிரானவர் என்று சொல்கிறார்கள். ஆனால், பெரியார் ஒரு சாதிக்கு மட்டும் தான் எதிரானவர் போல் எனக்குத் தெரிகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார். அந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.

Categories

Tech |