சாலையில் நடந்து சென்ற தொழிலாளி மீது இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள சின்னகொசபள்ளம் கிராமத்தில் சிங்காரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சிங்காரம் கரும்பு வெட்டும் வேலையை முடித்து விட்டு நடந்து சென்று கொண்டிருக்கும் போது பின்னாடி வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த சிங்காரத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிங்காரம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி சிங்காரத்தின் மகன் பால்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.