மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள நத்தம் பகுதியில் இருக்கும் அடையார் ஆற்றங்கரையோரம் மணல் கடத்துவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள் எந்திரத்தின் மூலம் லாரிகளில் மணலை திருட்டுத்தனமாக கடத்துவதை கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மணல் கடத்திய குற்றத்திற்காக எழில்வாணன் மற்றும் கண்ணன் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்த பொக்லைன் எந்திரம் மற்றும் லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.