வீட்டில் இருந்த கட்டிட தொழிலாளியின் மனைவி மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பழனி வட்டத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மதுமித்ரா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் மதுமித்ராவிற்க்கும் புஷ்பராஜ் என்பவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. அதன்பின் வீட்டில் இருந்த மதுமித்ரா திடீரென காணாமல் போயுள்ளார்.
இதையடுத்து அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்காத காரணத்தினால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன பெண்ணை தேடி வருகின்றனர்.