திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடத்தும் கல்லூரி தேர்வுக்கு ஒரு தாளுக்கு தேர்வுக் கட்டணமாக 50 ரூபாய் வாங்கப்பட்ட நிலையில் தற்போது 150 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 100 ரூபாயாக இருந்த மதிப்பெண் சான்றிதழ் தற்போது 500 ரூபாயாக உயர்த்தப்பட்டு இருக்கின்றது.
இதைத்தொடர்ந்து தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டதால் பல்வேறு கட்சிகள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மாற்றியமைக்கப்பட்ட தேர்வு கட்டணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள தேர்வு கட்டணமானது இந்த மாதம் நடைபெறும் தேர்வுக்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.