ஏப்ரல் 19ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சித்திரைத் திருவிழா நடைபெற உள்ளது. அதன்படி ஏப்ரல் 14ஆம் தேதி தமிழர் திருநாள் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் தமிழகத்தில் பெரும்பாலான கோயில்களில் சித்திரை தேர் திருவிழா நடைபெறும். அந்த வகையில் மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றம் இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அதில் தஞ்சை பெரிய கோவிலிலும் கொடியேற்றம் நடந்து சித்திரைத் திருவிழாவுக்கு தயாராகிக் கொண்டு வருகின்றது.
அதன் படி, திருச்சியில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் சித்திரை தேர் திருவிழா நடைபெற உள்ளதால் ஏப்ரல் 19ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வு எழுதுவோருக்கு இந்த விடுமுறை பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.