காய்கறி வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூரில் காய்கறி வியாபாரியான செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த செல்வராஜ் தனது உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
இதனை அடுத்து செல்வராஜின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து சென்ற அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி செல்வராஜ் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.