Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கல்லரைபாடி பகுதியில் ராஜீவ் காந்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் மேஸ்திரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு நதியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நதியா கணவரிடம் கோபித்து கொண்டு திருவண்ணாமலை டவுன் பே கோபுரம் பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

கடந்த 9-ஆம் தேதி நதியா திடீரென வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் நதியாவை உடனடியாக மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அனிதா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த திருவண்ணாமலை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |