மின்சாரம் பாய்ந்து 12 ஆடுகள் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள கோவிலூரில் விவசாயியான பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு சொந்தமான செம்மறி ஆடுகள் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக மின்கம்பி அறுந்து தோட்டத்து கம்பி வேலி மீது விழுந்தது. இதனையடுத்து செம்மறி ஆடுகள் கம்பி வேலியின் அருகில் ஒதுங்கியபோது ஆடுகள் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில் 12 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆடுகளை பரிசோதனை செய்துள்ளனர். அதன்பிறகு பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டப்பட்ட குழியில் ஆடுகள் புதைக்கப்பட்டது.