பள்ளி மாணவியை கடத்தி சென்ற சிறுவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள நாழிக்கல்பட்டி பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரின் வீட்டிற்கு அதே பகுதியில் வசிக்கும் 18 வயது சிறுவன் சென்றுள்ளான். இந்நிலையில் சிறுவன் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் மாணவியை மிரட்டி சிறுவன் மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றுள்ளார்.
இதுகுறித்து மாணவியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் சிறுவனை கைது செய்தனர். மேலும் சிறுமியை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு காவல்துறையினர் அழைத்து சென்றனர்.