திண்டிவனத்தில் வீடுகளில் புகுந்து தொடர் கொள்ளையில் ஈடுபட்ட பெண்ணை பொதுமக்கள் பிடித்த போலீசிடம் ஒப்படைத்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அயனாவரம் பகுதியை சேர்ந்த முனுசாமி என்பவரது வீட்டில் புகுந்த பெண் ஒருவர் அங்கிருந்த நகை, பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துள்ளார்.
மேலும் அந்த பெண் தொடர்ந்து அருகில் உள்ள மணிவண்ணன் என்பவரது வீட்டிலும் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். அதுமட்டும் அல்லாமல் தொடர்ந்து மூன்றாவதாக குமார் என்பவரது வீட்டில் புகுந்த அந்த பெண் 11 சவரன் நகைகளை திருடிக் கொண்டு தப்பிக்க முயன்றுள்ளார்.
இவ்வாறு அடுத்தடுத்து 3 வீடுகளில் புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட அந்த பெண் பின்னர் அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். அந்த சமயத்தில் அப்பகுதியிலுள்ள மக்கள் ஒன்று கூடி தொடர் திருட்டில் ஈடுபட்ட அந்த பெண்ணை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அந்த பெண்ணை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.