Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தாய் வீட்டிற்கு சென்ற மனைவி…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பெருங்குளம் கோவில் தெருவில் விவசாயியான நடராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மது குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் நடராஜனின் மனைவி கோபத்தில் தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த நடராஜ் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் நடராஜனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி நடராஜன் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |