சாலை விரிவாக்க பணிகளை நீதிபதிகள் ஆய்வு செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் 14 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது. இந்தப் பாதைகள் மிகவும் குறுகி காணப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் குன்னூர்- மேட்டுப்பாளையம் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் யானை வழித்தடங்களை ஆக்கிரமித்து சாலைகள் அமைக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இந்த வழக்கை மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரித்தது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் குழுவினர் வனப்பகுதிகள் மற்றும் சுற்றுச்சூழல் குறித்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வந்தனர். இவர்கள் சாலை விரிவாக்க பணிகளை ஆய்வு செய்தனர். அப்போது யானைகள் செல்வதற்கு போதுமான இடங்களை விட வேண்டும் என்றனர். மேலும் இது தொடர்பான அறிக்கையை விரைவில் சமர்பிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.