Categories
தேசிய செய்திகள்

மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன்…. காங்கிரஸ் கட்சியின் தலைவர்….பரபரப்பு பேட்டி…!!!

சமீபத்தில் நடந்த உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் 403 தொகுதிகளில், 2 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது.

பூமியின் மைய பகுதியாக அமைந்துள்ள உஜ்ஜைன் நகரில் உள்ள மகாகாலேஷ்வர் கோவிலிலுக்கு, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் மருமகனான ராபர்ட் வதேரா (வயது 53) சாமி தரிசனம் செய்தார். அதன்  பின்னர், உள்ளூர் யூடியூப் சேனல் ஒன்றில்  இவ்வாறு பேசியுள்ளார்.

அதாவது அரசியலை  தாம் புரிந்து வைத்திருக்கிறேன் என்றும்  மக்களுக்கான பிரதிநிதியாக நான் வரவேண்டும் என்று மக்கள் விரும்பினால், அவர்களுக்கு சில மாற்றங்களை என்னால் கொண்டு வர முடியும் என்று மக்கள் நம்பினால், நிச்சயம் அரசியலுக்கு வரும் முடிவை நான் எடுப்பேன் என்றும் கூறியுள்ளார். மேலும் அப்படி அரசியலுக்கு வந்து விட்டால், மக்களுக்கு என்னால் முடிந்த பெரிய அளவிலான சேவை செய்ய முடியும் என்றும் கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளுக்கும் கூடுதலாக என்னுடைய அறப்பணிகள் நடந்து வருகின்றன. மேலும் வருங்காலத்திலும் அவை தொடரும் எனவும் நான் அரசியலுக்கு வருகிறேனா, இல்லையா என்பதெல்லாம் விசயமில்லை.
ஆனாலும், இப்பணிகள் தொடர்ந்து நடைபெறும்.  இதுவே, மக்களுக்கு நான் சேவை செய்யும் வழியாகும் என கூறியுள்ளார்.
இதையடுத்து ,இன்றைய அரசியல் தன்மை எப்படி? மற்றும் நாடு எப்படி உருமாறி கொண்டிருக்கிறது என்பது பற்றி ஒவ்வொரு நாளும் நாங்கள் குடும்பத்துடன் ஆலோசிப்பது வழக்கம் என்றும் உண்மை தன்மையை மக்களுக்கு வெளிப்படுத்த  ஊடகங்கள் அச்சப்படுகின்றன என கூறியுள்ளார். மேலும் அண்மையில் நடந்து முடிந்த,  உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் 403 தொகுதிகளில், 2 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது.
இந்நிலையில் இந்த தேர்தலில் வதேராவின் மனைவி பிரியங்கா காந்தியின் செயல்பாடுகள் எப்படி இருந்தது? என்பது பற்றிய கேள்விக்கு, பிரியங்காவுக்கு 10க்கு 10 மதிப்பெண்கள் தருவேன் என்றும் அவர் இந்த தேர்தலுக்காக அல்லும் பகலும் பாடுபட்டு உழைத்துள்ளார். இருந்தாலும், மாநில மக்களின் தீர்ப்பினை, நாம் ஏற்று கொள்ள வேண்டும். எனவே முழுவீச்சில் அவர்களுக்கான சேவையை தொடர்ந்து செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |