அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ள உக்ரைனிய குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்த டால்பின்களின் சாகச நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உக்ரேன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து 47வது நாளாக நீடித்து வருகிறது. குறிப்பாக ரஷ்ய ராணுவ படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள கெர்சன் நகரிலிருந்து பல்வேறு தடைகளைத் தாண்டி தப்பித்து வந்த உக்ரேனிய மக்கள் ஒடிசா நகரில் தற்காலிகமான அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அங்குள்ள விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு விடுதி நிர்வாகம் சார்பில் டால்பின்களின் சாகச நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள உக்ரைனிய குழந்தைகள் தற்காலிகமாக தங்களின் கவலைகளை மறந்து மகிழ்ச்சியடைந்துள்ளனர்.