ஊரடங்கு நீடித்தால் பொதுமக்களின் உணவுப் பொருள்கள் மற்றும் மருந்துகளுக்கு தட்டுப்பாடுகள் ஏற்படலாம் என்று மக்கள் அச்சப்படுகின்றனர்.
சீனா நாட்டின் ஷாங்காய் நகரம் அமைந்துள்ளது. இந்த ஷாங்காய் நகரமானது மிகப்பெரிய வர்த்தக நகரமாக திகழ்கின்றன. இந்த நகரில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருவதால் பொது ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் முடக்கியுள்ளனர். மேலும் வாகன போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டிருப்பதால் நகர வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து ஷாங்காய் நகரில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
மேலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் உணவுப் பொருட்களை வழங்கி வந்தாலும் அது பொது மக்களுக்கு போதுமானதாக இல்லை. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். இதனைத்தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வரும் மக்கள் பால்கனி வழியாக போலீசார் மற்றும் ஊழியர்களிடம் உதவி கேட்டு கெஞ்சி வருகின்றனர். ஆனால் அவர்கள் தங்களுக்கு எந்த உதவியும் செய்ய முன் வரமாட்டார்கள் என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதே மாதிரி ஊரடங்கு நீடித்தால் அத்தியாவசியமான மருந்துகளுக்கும் தட்டுப்பாடுகள் ஏற்படலாம் என்று மக்கள் அச்சப்படுகின்றனர்.