Categories
உலக செய்திகள்

திடீர்னு என்ன மாற்றம்…. நெப்டியூன் கிரகத்தின் ஆய்வில்…. வெளியான அதிர்ச்சி முடிவுகள்….!!

நெப்டியூன் கிரகத்தில் நிகழும் மாற்றத்தால் விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

சூரிய குடும்பத்தில் புளூட்டோ குறுங்கோள் என அறிவிக்கப்பட்டது.  இதனை அடுத்து  நெப்டியூன் சூரிய குடும்பத்தின் கடைசி கிரகமாக விளங்குகிறது. இந்த நெப்டியூன் கிரகம் சூரியனை ஒருமுறை சுற்றிவர 165 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது.
இந்நிலையில் லீசெஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நெப்டியூன் கிரகம் குறித்து ஆய்வு செய்துள்ளனர்.  இந்த ஆய்வில் நெப்டியூனின் வெப்பநிலை மாற்றம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து 17 ஆண்டுகளில் நெப்டியூனின் வெப்பநிலை மாற்றங்களை கண்காணித்த ஆராய்ச்சியாளர்கள் மைனஸ் 220 டிகிரி செல்சியஸுக்கு வெப்பநிலை வீழ்ச்சியடையும் குளிர் கிரகம் தென் துருவத்தில் வியத்தகு முறையில் வெப்பமடைவதைக் கண்டறிந்தனர். மேலும் கோடை காலம் வந்தாலும் கிரகத்தின் பெரும்பகுதி குளிர்ச்சியடைந்து இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆனால் கிரகத்தின் தென்துருவம் மீண்டும் வெப்பமடைவதை அவர்கள் கவனித்து உள்ளனர்.  இந்த நிகழ்வை கண்ட விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |