தமிழ்நாட்டில் மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
அதன்படி மதுரை பகுதியில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 12ம் தேதி காலை 10: 00 — மதியம் 2: 00 மணி வரை சிட்டம்பட்டி, செளராஷ்டிரா காலனி, பொருசுப்பட்டி, கத்தப்பட்டி, வெள்ளரிப்பட்டி, தெற்குத்தெரு, மாங்குளம், அயிலான்குடி, பட்டணம், லெட்சுமிபுரம், மாயாண்டிபட்டி, சிதம்பரம்பட்டி, அப்பன் திருப்பதி, பூசாரிப்பட்டி, ஜோதியாபட்டி, மாத்துார், செட்டிகுளம், பூண்டி, நரசிங்கம்பட்டி, தெற்குத்தெரு, அரிட்டாபட்டி, விநாயகபுரம், கல்லம்பட்டி, பெரியசூரக்குண்டு, மருதுார், வளச்சிகுளம், பூலாம்பட்டி, திருக்காணை, இலங்கிப்பட்டி, பனைகுளம், இந்திராகாலனி, சித்தாக்கூர், பெருமாள்பட்டி, அரும்பனுார், செங்குளம், மலையாண்டிபுரம், கொடிக்குளம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரியலூர் மாவட்டம், சாத்தமங்கலம் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய துணை மின் நிலையத்தில் 12ம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பகுதிகளான திருமானூர், திருமழபாடி, இலந்தைக்கூடம், அரண்மனை குறிச்சி, அன்னிமங்கலம், சாத்தமங்கலம் உள்பட சுற்றுப்புற கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.