நேர்காணலில் விஜய் பேசியதைப் பார்த்த எஸ்.ஏ.சி மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார்.
விஜய் நேர்காணல் ஒன்றில் பேசியது அவரின் அப்பாவான சந்திரசேகருக்கு மிகவும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளதாம். விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் நாளை ரிலீஸாக உள்ள நிலையில் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக சன் டிவி தொலைக்காட்சிக்கு சிறப்பு நேர்காணல் அளித்திருந்தார் விஜய். 10 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் சந்திக்கும் நேர்காணலில் இயக்குனர் நெல்சன் தான் தொகுப்பாளராக இருந்தார். நேர்காணலில் விஜயிடம் அப்பா எஸ்.ஏ.சிக்கும் உங்களுக்கும் இடையிலான மனஸ்தாபம் பற்றி கேள்வி எழுப்பினார்.
அப்போது அவர் கூறியுள்ளதாவது கடவுளுக்கு அடுத்தபடியாக எனக்கு என் அப்பா தான் இன்று ஒரு மரம் பூக்கலாம் காய்க்கலாம். ஆனால் அதன் வேர் தான் அதற்கு காரணம். என் அப்பாதான் எனது குடும்பத்தின் ஆணிவேர். விஜய்யின் இந்த பதில் இருவருக்கும் இடையே எந்த மனவருத்தமும் இல்லாதது போல் இருந்தது. இந்நிலையில் விஜய் நேர்காணலில் அளித்த பதிலை பார்த்த எஸ்.ஏ.சி மிகவும் சந்தோஷம் அடைந்துள்ளார். இதுபற்றி எஸ்எஸ்ஏ கூறியுள்ளதாவது, எல்லா அப்பா மகன்களுக்கும் விஜய் பேசியது மகிழ்ச்சியாகத்தான் இருந்திருக்கும். நானும் விஜய்யும் எப்போதும்போல் இயல்பாகத்தான் இருக்கின்றோம். எந்த வீட்டில் தான் பிரச்சனை இல்லை என கேட்டுள்ளார். ஊடகங்கள் தான் எங்களுக்குள் பிரச்சினை இருப்பதாக எழுதி வருகின்றனர் என எஸ்.ஏ.சி குற்றம்சாட்டியுள்ளார்.