Categories
மாநில செய்திகள்

15 வயதுக்கு மேற்பட்டோருக்கு…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீதான எம்எல்ஏக்கள் விவாதம் நேற்று நடந்தது. இதில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அந்த வகையில் சென்னை பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் நவீன வசதிகளுடன் புதிய விடுதிகள் ரூபாய் 30 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப் படிக்கத் தெரியாத 4.80 லட்சம் நபர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கும் வகையில் 1.83 கோடி மதிப்பீட்டில் புதிய எழுத்தறிவுத் திட்டம் செயல்படுத்தப்படும். பள்ளிக்கு வர இயலாத 10 ஆயிரத்து 146 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி மற்றும் இயன்முறை மருத்துவம் உள்ளிட்ட சிகிச்சைகளை அவர்களின் வீடுகளுக்கு சென்று வழங்கி அவர்களின் கற்றல் சூழலை மேம்படுத்த 8.11 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Categories

Tech |