விஜய் நடிக்கும் தளபதி 66 திரைப்படத்தைப் பற்றி தகவல் ஒன்று கசிந்துள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். மேலும் தமன் இசையமைக்க விவேகா பாடல்களை எழுதி இருக்கின்றார். இத்திரைப் படத்தில் 6 பாடல்கள் இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அண்மையில் படத்தின் பூஜை சென்னையில் தொடங்கியது.
இந்நிலையில் இத்திரைப்படம் பற்றிய செய்தி ஒன்று கசிந்திருக்கின்றது. அது என்னவென்றால் தளபதி 66 திரைப்படத்தில் ஒரு சண்டைகாட்சி கூட இல்லையாம். இதைக் கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து விட்டனர். நாளை வெளியாக இருக்கும் பீஸ்ட் படத்தில் சண்டை காட்சிகளுக்கு பஞ்சமே இல்லை. ஆனால் இந்த படத்தில் சண்டைக் காட்சிகளே இல்லை என கூறியதால் ரசிகர்கள் இது எந்த மாதிரியான படம் என கேட்டு வருகின்றனர். இந்த படமானது தமிழில் எடுக்கப்பட்டு தெலுங்கில் டப் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.