உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு வருகின்ற 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக வைகை அணையில் இருந்து இன்று மாலை ஆறு மணிக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நேற்று மாலை 6 மணிக்கு ஆயிரம் கன அடி வீதம் சிறிய மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. வருகின்ற 16ஆம் தேதி வரை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்கு மூன்று நாட்கள் முன்புதான் வைகை அணையில் தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு 5 நாட்களுக்கு முன்பே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களும் பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.