ஏப்ரல் 14ஆம் தேதி மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு புதுச்சேரியில் அனைத்து மதுக்கடைகளையும் மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 14ஆம் தேதி புதுச்சேரி, காரைக்கால், மாஷி, ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் உள்ள கள், சாராயக்கடை மற்றும் அனைத்து விதமான மதுக் கடைகளும் மூடப்படும். மேலும் உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. இந்த அறிவிப்பை மது பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியை தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் ஏப்ரல் 14ஆம் தேதி மதுக்கடைகள் மூடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
Categories