நானி நடிப்பில் கௌதம் தின்னணுரி இயக்கி வெளியான படம் `ஜெர்ஸி’. இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, படம் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்த ரீமேக்கையும் கௌதம் தின்னணுரியே இயக்கினார். ஷாஹித் கபூர், மிருணாள் தாக்கூர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.
இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்பு தள்ளிவைக்கப்படுவது தொடர்ந்து நடந்தது. உறுதியாக ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்ப நிலையில் தற்போது, ஏப்ரல் 22ம் தேதிக்கு படம் தள்ளிப் போகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. கே.ஜி.எஃப் 2 படத்திற்கு பாலிவுட் திரையுலகிலும் உருவாகியுள்ள எதிர்பார்ப்பு தான் எனக் கூறப்படுகிறது.