வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
தென்கிழக்கு ஆசியாவில் பிலிப்பைன்ஸ் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் தெற்கு மற்றும் மத்திய நகரங்களில் நேற்று முன்தினம் “மெகி” என்ற சூறாவளி தாக்கியது. இந்த சூறாவளியால் பல்வேறு நகரங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகின்றது. இந்த கன மழையினால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்நிலையில் பல பகுதிகளில் சாலை வசதி மற்றும் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகினர்.
இதனைத் தொடர்ந்து 13 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக அந்நாட்டின் லெய்டி மாகாணத்தில் பேபே என்ற நகரில் கொட்டி தீர்த்த கன மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் இன்னும் பலர் சிக்கி உள்ளதாகவும் அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.