பிரதமர் மோடி தலைமையிலான இரண்டாவது ஆட்சி காலத்தின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில் இந்த பட்ஜெட்க்கான எதிர்பார்ப்புகள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பொருளாதார மந்த நிலை உள்ளதால் அதை போக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என இந்த பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு உள்ளது.
முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் அறிவிப்புகள் இருக்க வேண்டும் என்றும் , உள்கட்டமைப்பில் அதிக முதலீடு செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கட்டமைப்புத் துறையில் முதலீடு மூலம் சிமெண்ட் , இரும்பு , கட்டுமான துறை வளர்ச்சி அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட்டில் பற்றாக்குறை உள்ளது என விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் அதை குறைக்க வேண்டியது அரசின் கடமையாக உள்ளது.
பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப் பட்டாலும் அதை செயல்படுத்த நிதி வேண்டும் என்பதால் மூலதனம் திரட்டுவதற்கும் , திட்டமிட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.
முதலீடு செய்வதை ஊக்குவிக்க வேண்டும்.
வங்கி சேமிப்பு களிலிருந்து வட்டி குறைவாக கிடைக்கிறது என்பதால் மக்கள் முதலீடு செய்ய தயக்கம் காட்டுகின்றனர்.
வருமான வரி இல்லாத கடன் பத்திரங்களை வெளியிட்டால் மக்கள் முதலீடு செய்வதன் மூலம் பொதுக்கட்டமைப்பு துறைக்கு தேவையான மூலதனம் கிடைக்கும்.
பாதுகாப்பு துறைக்கு ஒதுக்குவது போல விவசாயத்துக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்றும் , உணவு பொருள் சேமிப்பு , பதப்படுத்துதல் துறை ஆகியவற்றை வளர்க்க திட்டங்களை அறிவிக்க வேண்டும்.
தனிநபர் வருமான வரிச் சலுகைகளை பொருத்தவரை இதற்குமேல் குறைக்க வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.
புதிய தொழில்கள் உருவாகும் சூழ்நிலை அரசு ஏற்படுத்த வேண்டும், அதன்மூலம் புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்பவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாகும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.