நண்பனின் தாயை தாக்கிவிட்டு நகையை திருடி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாப்பிள்ளைகுப்பம் பகுதியில் மலர் என்பவர் வசித்து வருகிறார்.இவருக்கு செந்தில்குமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மலர் வீட்டின் கதவை திறந்து வைத்துக்கொண்டு தூங்கி கொண்டிருந்தார்.அப்போது திடீரென வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் மலரை தாக்கிவிட்டு கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
இதில் படுகாயமடைந்த மலரை செந்தில்குமார் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில்அனுமதித்துள்ளனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து செந்தில்குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மலரை தாக்கிவிட்டு நகையை பறித்து சென்றது செந்தில்குமாரின் நெருங்கிய நண்பரான வினோத் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் வினோத்தை கைது செய்து அவரிடம் இருந்த தங்க சங்கிலியை மீட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.