ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் தொடர்ந்து தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபடுவதால் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வரும் பொதுமக்கள் சிலர் பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணையை கொண்டு வந்து தீக்குளிக்க முயற்சி செய்யும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க காவல்துறையினரின் சார்பில் பாதுகாப்பு பணிக்காக ஆட்சியர் நுழைவு வாயிலில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆட்சியரிடம் மனு அளிக்க வரும் பொதுமக்களை நிறுத்தி அவர்களிடம் பெட்ரோல் மண்ணெண்ணெய் போன்றவை உள்ளதா என சோதனை செய்த பின்பே அவர்களை உள்ளே அனுமதிக்கின்றனர். அந்த சோதனையில் மாற்றுத்திறனாளி உள்பட 2 பேரிடம் பெட்ரோல் பாட்டில்கள் இருந்துள்ளது. இதுகுறித்து அவர்களிடம் விசாரணை செய்ததில் தங்களது சொந்த உபயோகத்திற்கு வாங்கி செல்வது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.