Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திடீரென வேரோடு சாய்ந்த மரம்…. 2 ஆட்டோக்கள் சேதம்…. கவலையில் உரிமையாளர்கள்…!!

2 ஆட்டோக்கள் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் குளச்சல் பகுதியில்  நகராட்சி அலுவலகம் அமைந்துள்ளது. இதன் முன்பாக சாகுல் ஹமீது மற்றும் சேவியர் ஆகிய 2 பேரும் தங்களுக்கு சொந்தமான ஆட்டோக்களை நிறுத்தி வைத்துள்ளனர்.

அங்கு பலத்த மழை பெய்து கொண்டிருந்ததால்  திடீரென மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதில் ஆட்டோக்கள்  சேதமடைந்தது. இதுகுறித்து நகராட்சி ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு நகராட்சி ஊழியர்கள் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |